இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக ஒரே நாளில் 12 லட்சத்திற்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 12 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், ஒரு நாளில் அதிகப்பட்ச மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை மொத்தம் 6,36,61,060 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
54,00,620 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.