நாடாளுமன்றத்தில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய விவசாயத்துறை வரலாற்றில் முக்கிய திருப்பம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாக்கள் விவசாயத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தையும், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதையும் உறுதி செய்யும் என்று ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் பல்வேறு தடைகளாலும், இடைத்தரகு முறையாலும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் விவசாயிகளை அத்தகைய துன்பங்களில் இருந்து விடுவித்து இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலை முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், விவசாயிகளிடம் அரசின் கொள்முதல் தொடரும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.