பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நியமன விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் வலுத்துள்ளது.
இந்தியா நியமித்த ஜெயந்த் கோபர்கோடேவுக்கு விசா வழங்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.
கோபர்கோடே மூத்த அதிகாரி என பாகிஸ்தான் ஆட்சேபம் கூறியுள்ளது. ஆனால் யாரை நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கட்டளையிட முடியாது என்று இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உளவு பார்ப்பதாக கையும் களவுமாக சிலர் சிக்கியதையடுத்து தூதரக அதிகாரிகளை 50 சதவீதம் குறைக்கும்படி பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தரவிட்டது.
இப்பிரச்சினையினாலும் காஷ்மீர் விவகாரத்தாலும் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தான் பதிலுக்கு தூதர் நியமன விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்