உத்தரப்பிரதேசத்தில் மாற்றுத் திறனாளியை அடித்து துன்புறுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கனூஜ் மாவட்டத்தில் ரிக்சா ஓட்டி வரும் அந்த மாற்றுத் திறனாளி இளைஞர், அனுமதிக்கப்படாத சாலையோரம் இடத்தில் வைத்து பயணிகளை சவாரிக்காக ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அந்த மாற்றுத்திறனாளி இளைஞரை அடித்து, தண்டால் எடுக்கச் செய்து காவலர் தண்டனை வழங்கினார்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து குறிப்பிட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கனூஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.