ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நாளை முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 200 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.
மனிதர்களுக்கு பரிசோதிக்கும் இந்த மூன்றாம் கட்ட நடவடிக்கையை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
புனேயின் சாசோன் பொது மருத்துவமனையில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கிலாந்தில் ஒருவருக்கு உடல் நலபாதிப்பு ஏற்பட்டதையடுத்து பரிசோதனைகள் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆனால் மீண்டும் பரிசோதனையை நடத்த செப்டம்பர் 15ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.