வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு போக்குவரத்துகளில் முடங்கிக்கிடக்கும் வெங்காய மூட்டைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
வங்காள தேசத்திற்கு சாலைவழியாக சரக்கு லாரிகளில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் வெங்காய மூட்டைகளுடன் எல்லையில் அணி வகுத்து நின்றன.
வெங்காயம் ஏற்றுமதி செய்ய முடியாததையடுத்து வியாபாரிகள் அதனை உள்ளூர் சந்தைகளுக்குத் திருப்பி விட்டனர். இதனால் வெங்காய வரத்து அதிகரித்து விலை கடுமையாக சரிந்தது. இந்நிலையில் போக்குவரத்துகளில் முடங்கிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.