சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இணையவழியாக நடைபெற்ற சைபர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்திய அவர் கொரோனா பேரிடரால் ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனைப் பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அதனை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அஜித் தோவல் வலியுறுத்தினார்.