மேகதாது திட்டம் உள்ளிட்ட கர்நாடக திட்டங்களுக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்திற்காக கட்சித் தலைமையிடம் அனுமதி கேட்க டெல்லி சென்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாஇதுதொடர்பாக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை அவர் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல்அளிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதே போல் காலசா-பந்தூரி திட்டத்திற்கும் அனுமதியை அவர் கோரினார்.