இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்' என, அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் அவர் கேள்வி ஒன்றுக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத போது இஸ்ரோவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றார்.
இதற்காக ஒரு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி நடவடிக்கைகளில் 500 நிறுவனங்கள் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் எந்திர வடிவமைப்புகளையும், மின்னணு வடிவமைப்புகளையும், சிஸ்டம் மேம்பாடுகளையும், ஒருங்கிணைப்புகளையும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.