மாநிலங்கள் கேட்டுக்கொண்டால் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4-வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதைப்போல வழக்கமான பயணிகள் சிறப்பு ரயில் போக்குவரத்தும் குறிப்பிட்ட சில தடங்களில் இயக்கப்படுகின்றன. புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.
எனினும் மும்பையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் பிற பகுதிகளில் புறநகர் ரெயில்களின் இயக்கம் தொடர்பாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
புறநகர் ரயில்களை இயக்குவது தொடர்பாக மாநில அரசுகள் அணுகினால் அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம் என்று கூறினார்.