மத்திய அமைச்சரவையில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் விலகினாலும் மத்திய அரசுக்கு ஆதரவு தொடரும் என்று சிரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்கள் கட்சி நீடிக்கும் என்றும், அரசுக்கு எந்தவித நெருக்கடியையும் கொடுக்க மாட்டோம் என்றும் அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்களவையில் விவசாயிகள் தொடர்பான மூன்று மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டதால் மத்திய அரசில் அங்கம் வகிக்க தாம் விரும்பவில்லை என்று ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.