இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1.64 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், இறப்பு விகிதம் உலக அளவில் மிக குறைவாக இருப்பதாக குறிப்பிட்டார்.
ஸ்பெயின், பிரேசில் போன்ற நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் 11 மடங்கு அதிகமாக இறப்பு உள்ளதாக கூறினார். இந்தியாவில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 78-79 சதவீதம் என்ற உலக அளவில் உயர்ந்த விகிதத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.