புதுவையில் பேரக்குழந்தைகளின் ஆசைக்காக பெண் ஒருவர் பூனைக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார்.
புதுச்சேரி மூலக்குளம் பெரம்பை ரோட்டை சேர்ந்த வசந்தா, வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.அந்த பூனை கர்ப்பமாக இருந்தது.
இந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் வளைகாப்பை பார்த்த வசந்தாவின் பேரக்குழந்தைகள் அதேபோன்ற நடத்த வேண்டும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் பூனைக்கு வசந்தா வளைகாப்பு நடத்தினார். பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதை போன்றே மாலை அணிவித்து வளையல் அணிவித்து திருஷ்டி சுற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.