உலகில் உள்ள எந்த ஒரு சக்தியாலும், இந்திய திருநாட்டின் எல்லையில், நமது பாதுகாப்புப்படையினர் மேற்கொள்ளும் ரோந்துப் பணியைத் தடுத்து நிறுத்த முடியாது என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
லடாக் விவகாரம் தொடர்பாக, எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இதனை கூறியிருக்கிறார்.
மோதல்களை தடுக்கவும், ஊடுருவல்களை முறியடிக்கவும், ரோந்து பணி என்பது, மிகவும் அவசியமானது என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், இது ஏதோ அண்மையில் ஏற்பட்ட நடைமுறை அல்ல என்றும், பன்னெடுங்காலமாக, தொடரும் வழக்கம் தான் என்றும் குறிப்பிட்டார்.