கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நிகழ்வுகளில் திங்கட்கிழமை பங்கேற்றுள்ளார்.
அவையில் முதல் வரிசையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தம்முடன் நெருங்கி இருந்த அனைவருமே உரிய பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.