இந்தியாவில் கொரோனாவுக்கு 382 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம் உயிரிழந்த மருத்துவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
அவர்களை தியாகிகளைப் போல் கௌரவிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் விடுத்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மருத்துவர்களுக்கு காப்பீடு தொகை குறித்த எந்த தகவல் தரவுகளும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் சேவைக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்த மருத்துவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.