போதைப்பொருள் விவகாரத்தில் கைதான கன்னட நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கன்னட திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் தொடர்பான விவகாரத்தில் நடிகை ராகிணி, சஞ்சனா உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராகிணி உள்பட 6பேர் நீதிமன்ற காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராகிணியின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்த நிலையில் அது ஒத்தி வைக்கப்பட்டது. மற்றொரு நடிகையான சஞ்சனாவின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அவர் வெப் கேமரா மூலமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.