ஆப்கானில் தாலிபன் இயக்கத்திற்கும் அரசுக்கும் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு அரசியல் உடன்படிக்கை மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் வரை தொடர வேண்டும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தான் மறு சீரமைப்புக்கான சிறப்பு தூதர் ஜால்மே காலிசாத் ( Zalmay Khalilzad ) டெல்லி வந்துள்ளார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய அவர், தாலிபன் மற்றும் ஆப்கன் அரசுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றி விவரித்தார். தோஹாவில் கடந்த 12ம் தேதி தொடங்கிய பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆதரவளித்ததற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.