இந்தியாவில் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் 1500 பேரிடம் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையை நடத்த உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, இந்தியாவில் 14 இடங்களில் இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் தடுப்புமருந்து கிடைப்பதற்கு நான்கு ஐந்து வருடங்களாகலாம் என்றும் அண்மையில் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.