நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை ஒரு வருடத்திற்கு குறைக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவசர சட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதற்கு மாற்றாக தற்போது சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.