ஆட்டிசம், டவுன் சின்றோம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான தனித்தேர்வர்களுக்கு இந்த மாதம் தேர்வு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுக்கு முன் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டிசம், மனநலிவு நோய் எனப்படும் டவுன் சின்றோமால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், தேர்வுக்கு வந்து செல்லும் போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர். நல்ல உடல் நிலையுடன் உள்ள மாணவர்களுக்கே விலக்க அளிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நிலை பாதிப்பு உள்ள இவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்களித்து, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.