ஸ்டேட் வங்கியில் 338 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அலுமினிய நிறுவனத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த எஸ் டீ அலுமினியம் லிமிட்டெட் என்ற நிறுவனம் (Ess Dee Aluminium Limited) பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் அலுமினிய தாள்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் எஸ் டீ நிறுவனம் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்கள் வங்கியில் 338 கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி குற்றம் சாட்டியிருந்தது.
இதையடுத்து மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், எஸ் டீ நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.