ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் அதன் கடன் தொகையையும் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருவாய் இழப்பு காரணமாக சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முடிவு செய்த மத்திய அரசு, நிறுவனத்தை விலைக்கு வாங்குபவர்கள் அதன் கடன் தொகையையும் ஏற்க வேண்டும் என அறிவித்தது.
இந்நிலையில், இந்த முடிவு விற்பனைக்கு தடையாக இருப்பதால், கடன் தொகையை ஏற்க வேண்டாம் எனவும், சந்தை மதிப்பில் அல்லாமல் நிறுவன மதிப்பிலேயே ஏலம் எடுக்கலாம் எனவும், மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.