பிரபல தனியார் நிறுவனமான ஓயோ ஓட்டல் மற்றும் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெடின் நிறுவனர் ரிதேஷ் அகர்வால் உள்ளிட்ட இருவர் மீது, மோசடி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விகாஷ் குப்தா என்பவர் அளித்த புகாரில், திருமண நிகழ்ச்சிகளுக்கான ரிசார்ட்ஸ்களை நடத்தி வரும் தனது நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து, உரிய கால அவகாசம் வழங்காமல் விதிமுறைகளை மீறி வெளியேறியதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஓயோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.