ஜம்மு பகுதியில் நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை 3 ஆயிரத்து 186 முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஜம்மு பிராந்தியத்தில் இந்தோ - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 242 முறை எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் குறிப்பிட்டார்.
பெரும்பாலான தாக்குதல்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடந்ததாகவும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டபோது தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் ஸ்ரீபாத்நாயக் தெரிவித்தார்.