நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.