மண் சரிவால் 66 உயிரை காவு வாங்கிய கேரள மாநிலம் ராஜமலை பெட்டி முடி பகுதி மனிதர்கள் வசிக்க ஏற்ற இடமில்லை என புவியியல் ஆய்வாளர்கள் அம்மாநில அரசுக்கு அறிக்கை சமர்பித்ததை அடுத்து, அங்கு வசித்து வந்த தமிழக தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மண் சரிவு குறித்து ஆய்வு நடத்திய புவியியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு அரசுக்கு அளித்த அறிக்கையில், ராஜமலைபெட்டி முடியில் மீண்டும் கனமழை பெய்தால் மண் சரிவு ஏற்படும் என சுட்டிக்காட்டியிருந்தது. இந்த நிலையில், அங்கு வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேறி அருகாமையில் எஸ்டேட் பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.