பொதுத்துறை வங்கிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனமாக வழங்க, நாடாளுமன்றத்தின் அனுமதியை மத்திய அரசு கோரியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால், வாராக்கடன் விகிதம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் 12.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இந்த சூழலில் பொதுத்துறை வங்கிகளுக்கு உதவும் வகையில் 20 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனமாக அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் மூன்றரை லட்சம் கோடி ரூபாயை பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் கூடுதல் செலவினமாக மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மத்தியஅரசு கோரியுள்ளது.