கடந்த மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்ட 68 நாள் ஊரடங்கின் போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வழியில் புலம்பெயர் பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விவரம் தங்களிடம் இல்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் குறித்த தகவல் இல்லாத நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது என்ற கேள்வியே எழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரம் பற்றிய கேள்விக்கு, மத்திய-மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், என்ஜிஓக்கள் உள்ளிட்டோர் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதாக அமைச்சர் சந்தோஷ் குமார் காங்க்வார் பதிலளித்தார்.