நீட் தேர்வு காரணமாக, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, மக்களவையில் திமுக குற்றம்சாட்டியது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "நீட் தேர்வை தடை செய், தமிழக மாணவர்களின் உயிர்களை காப்பாற்று" என எழுதப்பட்ட முகக் கவசத்தையும் திமுக எம்.பி.க்கள் அணிந்திருந்தனர்.
பின்னர் மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத் திட்ட அடிப்படையிலான நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.