புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரி ஓட்டுனர் திடீரென மயக்கம் அடைந்துவிட கணப்பொழுதில் சஞ்சய் என்ற போக்குவரத்துப் போலீஸ்காரர் அந்த லாரிக்குள் பாய்ந்து ஏறி வாகனத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, பெரும் விபத்து நேர்வதைத் தடுத்து நிறுத்தினார்.
நான்கு எரிவாயு டேங்கர் லாரிகள் முன்னும் பின்னும் செல்ல கடைசியாக வந்த லாரியின் ஓட்டுனர் திடீரென மயக்கம் அடைந்து சாய்ந்துவிட்டார். சல்வேஷ்வர் சுங்கச்சாவடியில் இதனைக் கவனித்த காவலர் ஒருவர், சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் ஏறி ஓரமாக நிறுத்தினார். இதனால், அருகே இருந்த வாகனங்கள் மீது லாரி மோதாமல் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது.
கடமையை செய்ததாக கூறும் போலீஸ்காரர் சஞ்சய்க்கு பாராட்டுகள் குவிகின்றன.