அசாமில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய்க் கிணற்றின் தீ பெருமளவு அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய்க் கிணற்றில் கடந்த மே மாதம் எரிவாயுக் கசிவு ஏற்பட்டது.
இரண்டு வாரங்கள் கசிவு நீடித்த நிலையில், எண்ணெய்க் கிணற்றிலும் தீப்பற்றியது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் 110 நாட்களாகப் போராடி தீயை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், தீயை முழுமையாக அணைக்க இன்னும் சில வாரங்களாகும் எனவும் தெரிவித்தார்.