நீட் தேர்வை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்துகின்றன.
நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக எம்.பி.க்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.
கூட்டத் தொடரில் நீட், சென்னை-சேலம் 8 வழிச்சாலை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையைக் கைவிடுதல் உள்ளிட்ட 12 பிரச்சினைகளை அவையில் எழுப்ப நேரம் ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.