விமானங்களுக்குள் வீடியோ எடுக்க எந்த தடையும் இல்லை என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெளிவுபடுத்தி உள்ளது.
ஆனால், ரிக்கார்டிங் உபகரணங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அது தெரிவித்துள்ளது. ரிக்கார்டிங் உபகரணங்களால் விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதுடன்.
இப்போதுள்ள சட்டங்களுக்கு அது எதிரானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமானத்திற்குள் வீடியோ எடுக்க அனுமதித்தால், சம்பந்தப்பட்ட விமானம், குறிப்பட்ட மார்க்கத்தில் இயங்க இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்படும் என இரு தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.