மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மூலக்குளம் பகுதியில் நீட் தேர்வு நடைபெற்ற தனியார் கல்லூரி மையத்தை ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் செவி சாய்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.