கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுடன் போர் பதற்றம் நிலவும் நிலையில், திபெத்தில் சீன ராணுவம் பிரமாண்ட போர் ஒத்திகை நடத்தியுள்ளது.
திபெத்தில் 5 ஆயிரம் மீட்டர் உயர மலை பகுதியில் சீன விமானப்படை, மின்னணு போர் படைப்பிரிவு, பீரங்கி படைப் பிரிவு உள்ளிட்டவை அண்மையில் ஒத்திகை நடத்தியுள்ளன.
எதிரிகளின் நிலையை டிரோன் மூலம் கண்காணிப்பது, பின்னர் விமானங்களில் இருந்து குண்டுகளை வீசி தகர்ப்பது, சிறிய ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட தாக்குதல் ஒத்திகையை நடத்தியுள்ளன. மலை பகுதியில் சீன படைகளின் கூட்டுப்போர் திறனை பரிசோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.