சத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பாண்டு மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த மார்ச் 21 அன்று மின்பா என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 17 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது தங்கள் தரப்பில் 3 பேர் மட்டுமே பலியானதாக மாவோயிஸ்ட்கள் கூறியிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி கோண்டா என்ற இடத்தில் நடத்திய சோதனையில் கிடைத்த கடித தகவல்களின் படி மார்ச் அன்று நடந்த மோதலில் 23 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.