மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையமான DGCI அனுமதியளித்தால் கோவிட் 19க்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனையைத் மீண்டும் தொடர இருப்பதாக புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவர் பரிசோதனையின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
நான்கு நாடுகளில் பரிசோதனை நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவில் அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் பரிசோதனையை நிறுத்தியது. நேற்று இங்கிலாந்தில் அத்தடை நீக்கப்பட்டு மீண்டும் பரிசோதனைகள் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீரம் நிறுவனமும் பரிசோதனைகளைத் தொடர தயார் என அறிவித்துள்ளது.