கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். நாட்டின் 5 மாநிலங்களில் கொரோனா பரவல் மிக அதிகளவில் உள்ளது.
மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் கடுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலமாக இணைந்த பிரதமர் மோடி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா குறித்து மக்கள் அலட்சியமாக இருக்க வேணடாம் என எச்சரித்தார். தனிநபர் இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.