நடிகை கங்கனா ரணாவத் இன்று மாலை மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்திக்க உள்ளார்.
மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை பகிரங்கமாக விமர்சித்ததால் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசால் பல்வேறு இடர்களை சந்தித்து வரும் கங்கனா மீது போதைப் பொருள் தொடர்பான வழக்கையும் மகாராஷ்ட்ரா போலீசார் பதிவுசெய்துள்ளனர்.
அவருடைய அலுவலகமும் எந்த வித முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆளுநரை சந்திக்க உள்ள கங்கனா ரணாவத், அதன் பின்னர் தமது சொந்த ஊரான மணாலிக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆளுநருடன் கங்கனா என்ன பேச உள்ளார் என்பது குறித்த தகவல் இல்லை.