விமானத்திற்குள் பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்தால், குறிப்பிட்ட விமானத்தின் சேவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சண்டிகரில் இருந்து மும்பை சென்ற இன்டிகோ விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் கடந்த இரு நாட்களுக்கு முன் பயணித்தார். அப்போது, ஊடகத்தினர் பாதுகாப்பு விதிகளைமீறி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோ வெளியாகின.
இது தொடர்பாக இன்டிகோ நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிசிஏ எனப்படும் பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பயணிகள் விமானத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுத்தது கண்டறியப்பட்டால், அந்த விமானம் அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இருவாரங்கள் இயக்க தடை விதிக்கப்படும் என டிசிஜிஏ எச்சரித்துள்ளது.