மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிட்டதட்ட ஒருமாதம் சிகிச்சை பெற்ற பின்னர் ஆகஸ்ட் 31ம் தேதி குணம் அடைந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு மீண்டும் அவர் ஏய்மஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமித் ஷாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்