கோவேக்சின் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல விளைவுகளை தந்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்தாக கோவேக்சினை உருவாக்கியுள்ளன. நாடு முழுவதும் 12 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் இது பரிசோதிக்கப்படுகிறது. 20 செம்முகக் குரங்குகளை (rhesus macaques) பயன்படுத்திச் செய்யப்பட்ட, விலங்குகள் மீதான முதல் கட்ட பரிசோதனையில், தடுப்பூசியானது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு பாரத்பயோ டெக் நிறுவனத்திற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.