சுஷாந்த் மரண வழக்குடன் தொடர்புடைய போதை பொருள் புகாரில், தமிழ் திரைப்பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்த புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபர்த்தி, தன்னிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது போதை பொருள் பயன்படுத்திய பாலிவுட் பிரபலங்கள் பெயரை கூறியதாக தகவல்கள் வெளியாகின. அதைவைத்து பட்டியல் தயாரித்த என்.சி.பி அவர்களிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த பட்டியலில் நடிகைகள் சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.