பாகிஸ்தான் அரசு தீவிரவாத இயக்கங்கள் தனது மண்ணிலிருந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று இந்தியாவும் அமெரிக்காவும் விடுத்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான இணைய வழி மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவும் அமெரிக்காவும் வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தானில் தீவிரவாதம் மறைமுக யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கும் எல்லைத் தாண்டிய தீவிரவாத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பைத்தாக்குதல், பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குறுக்கிட்டது.
பாகிஸ்தான் மிகப்பெரிய தியாகங்களை செய்திருப்பதாகவும் தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது.