நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 11.5 சதவிகிதமாக குறையும் என ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
அதிக கடன், மந்தமான வளர்ச்சி, பலவீனமான நிதி அமைப்பு உள்ளிட்டவற்றால் இந்தியாவின் கடன் பெறும் தகுதி தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் நிலையில், கொரோனாவால் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிவை நோக்கி செல்வதாக அது தெரிவித்துள்ளது.
அதே நேரம் 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10.6 சதவிகிதமாக உயரும் என்றும் மூடிஸ் கணித்துள்ளது.மற்றோர் கடன் ரேட்டிங் நிறுவனமான Fitch இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.5 சதவிகிதமாக குறையும் என கடந்த வாரம் கூறியது.