எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறும் நிலையில், பாதுகாப்புப்படை தலைமை தளபதி, மற்றும் முப்படைத் தலைமைத் தளபதிகளுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
தலைநகரில், மூடப்பட்ட கதவுகளுக்குள், மிகவும் ரகசியமாக மீட்டிங் நடைபெற்றிருப்பதாக கூறப்படுவதால், லடாக் எல்லை விவகாரத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மை நாட்களாக, லடாக் எல்லையில், சீனாவின் அத்துமீறலை முன்கூட்டியே கணித்து கண்காணிக்கும் இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுத்து விரட்டியடித்து வருகிறது.
இந்நிலையில், லடாக் சூழல், சீன அத்துமீறல் முயற்சி குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதிகள், பாதுகாப்பு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.