ஒருவருக்கு அறிகுறிகள் இருந்து, சோதனையில் கொரோனா இல்லை எனத் தெரிந்தால் கட்டாயம் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த இரு நாட்களாக ஒவ்வொரு நாளும் 95 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிகுறியுள்ள ஒருவருக்கு விரைவுச் சோதனையில் கொரோனா இல்லை எனத் தெரியவந்தாலும், ஆர்டி-பிசிஆர் முறையில் மீண்டும் ஒருமுறை சோதனை நடத்தி அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய நலவாழ்வு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.