நடிகை கங்கனா ரணாவத்தை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்ட அவரது அலுவலகத்திற்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கங்கனாவின் பாந்த்ரா இல்லத்தை அவர் மும்பை திரும்பும் நாளுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்த நிலையில் சிவசேனாவுக்கும் காங்கிரசுக்கும் எதிராக பாஜக களம் இறங்கி கங்கனாவுக்கு ஆதரவைத் தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே நடிகையை சந்தித்துப் பேசினார். இதனிடையே தனது இடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்ட கங்கனா ரணாவத் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளார்.