உத்தரபிரதேசத்தில் போலி காசோலைகளை பயன்படுத்தி அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் இருந்து, 6 லட்சம் ரூபாய் எடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமர் கோவில் கட்டுமான பணிகளை கவனிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்து, போலி காசோலைகள் மூலம் கடந்த 2-ந்தேதி இரண்டரை லட்ச ரூபாயும், 3-ந் தேதி மூன்றரை லட்ச ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளது.
3வது முறையாக சுமார் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை சமர்பித்தபோது, பெரும்தொகை என்பதால் உறுதிப்படுத்திக் கொள்ள வங்கியில் இருந்து அறக்கட்டளையை தொடர்பு கொண்டதில், மோசடி அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பான புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.